சகல ஜனங்களே கைகொட்டி தேவனை


          சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
            கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே (2)

சரணங்கள்

1.         உன்னதமானவராகிய கர்த்தர்
            எந்நாளும் அதிசயமானவராமே
            மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம்
            மகிழ்ந்து போற்றிடுவோம்                                  - சகல
2.         போற்றி போற்றி பாடிடுவோமே
            தேற்றி நம்மைக் காத்திடும் தேவனை
            ஆற்றிடுவாரே ஆவிதனையே
            சாற்றிடுவோம் துதியை                                     - சகல
3.         தேவாதி தேவன் ஆர்ப்பரிப்போடும்
            கர்த்தாதி கர்த்தன் எக்காளத்தோடும்
            பிரதான தூதனுடைய சத்தத்தோடும்
            எழுந்தருளி வருவார்                                        - சகல
4.         கர்த்தருக்குள் மரித்தோர் முதலுயிர்த்திடுவார்
            சத்தியத்தில் நிற்போர் மறுரூபமடைவார்
            விரைவில் இயேசு வேகமே வருவார்
            சந்திக்க ஆயத்தமா?                                       - சகல
5.         அநேக ஸ்தலங்கள் அங்கேயும் உண்டு
            அதில் ஒன்று நமக்காய் ஆயத்தம்பண்ணி
            அழைக்கவே வருவார் அனுதினம் நாமும்
            அல்லேலூயா பாடுவோம்                                   - சகல

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு