கருணைக் கடலாம் - இயேசுவே
கருணைக் கடலாம் - இயேசுவே
கனிவுடனே இப்போ - இறங்கிடுமே
- எங்கள்
சரணங்கள்
1. வாரும் வல்லமையாய்த் தாரும் வரங்களை
வர்த்திக்க வேணும் விஸ்வா-சத்தை
புகழ்ந்திடவே திரு நா-மத்தை-எங்கள் - கருணை
2. தாரக மற்ற தரணி யோரை
தாமத மின்றியே மீட்டிட
எழுந்திடுமே இந்நே-ரமே- எங்கள் - கருணை
3. அப்போஸ்தலர் காலம் போல
அற்புதங்கள் அடையாளங்கள்
அதிசய நாமத்தில் ஓங்-கிட-எங்கள் - கருணை
4. முடவர் குதிக்க ஊமை துதிக்க
செவிடர் குருடர் கூ-னரும்
சுகமடைந்து உமைப் பா-டிட - எங்கள் - கருணை
5. கன்னியாகக் கறை களின்றி
மன்னன் தோன்றும் வே-ளையில்
பறந்திடவே சபை மே-கத்தில் - எங்கள் - கருணை
6. தயா கரமே தஞ்சம் நீரே
தியாகமே மேன்மையாம் தா-சரே
அபிஷேகித்து உபயோ-கியும் - எங்கள் - கருணை
Comments
Post a Comment