போற்றுவோமே போற்றுவோமே


பல்லவி

          போற்றுவோமே போற்றுவோமே
            எம் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே

1.         துங்கன் யேசுவே தூயா உமக்கே
            துதிகள் சாற்றிடுவேன்
            மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி
            எங்கும் துதித்திடுவேன்
            கங்குல் அற எங்குமே ஒளி
            மங்கிடாமலே தங்கிட வேணும்             - போற்றுவோமே

2.         ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே
            அணைத்து எடுத்தோனே
            ஆழிதன்னில் எம் பாவம் எறிந்த
            அன்னை உத்தமனே
            அன்றும் என்றும் என்றும் துதிப்பேன்
            மன்னவனையே மண்ணிதினிலே           - போற்றுவோமே

3.         பாவம் போக்கியே கோபம் மாற்றியே
            ரோகம் தொலைத்தோனே
            துரோகி என்னையே சுத்திகரித்த
            தூய வேந்தனே
            தூயா நேயா காயமாற்றியே
            கருணாநிதியே பரிகாரியே                    - போற்றுவோமே

4.         பாரில் என்னையே பிரித்தெடுத்தோனே
            தாவி வந்தோனே
            அகமதினிலே ஆவி ஈந்திட
            அருள் நிறைந்தவனே
            தரிசனம் தந்த தேவனே
            பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க                  - போற்றுவோமே

5.         பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திட
            கிருபை அளித்தோனே
            புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே
            மகிமை செலுத்திடுவேன்
            கோனே தேனே கோதில்லாதோனே
            கானம் பாடியே துதித்திடுவேன்             - போற்றுவோமே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு