ஐயரே, நீர் தங்கும்! என்னிடம்


1.       ஐயரே, நீர் தங்கும்! என்னிடம்
            ஐயரே, நீர் தங்கும் - இப்போ
            அந்தி நேரம் பொழுதஸ்தமித்தாச்சே
            ஐயா, நீர் இரங்கும்.

2.         பகல் முழுவதும் காத்தீர் சென்ற
            பகல் முழுவதும் காத்தீர் - தோத்திரம்
            பரமனே, இந்த இரவிலும் வாரும்
            பாவியை நீர் காரும்

3.         தங்கா தொருபொருளும் என்னிடம்
            தங்காதொரு பொருளும் - இயேசு
            தற்பரனே நீர் ஒருவரே யென்னில்
            தங்கித் தயை புரியும்.

4.         உயிரே துமையன்றிப் பாவிக்
            குயிரே துமையன்றி? - என்றன்
            உடல் உயிர் உம்மால் உய்கிறதையா,
            உத்தமனே, தங்கும்.

4.         எனக்கு நீர் காவல் என்றும்
            எனக்கு நீர் காவல் - எந்தன்
            இனத்தார் ஜனத்தார் எளியோர் வலியோர்
            எல்லாவர்க்குங் காவல்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு