27 June 2018

நம் இயேசுவின் வருகை இன்று


1.       நம் இயேசுவின் வருகை இன்று
            வெகு சமீபமாய்த் தெரிகின்றது
            உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
            வெகு அவசியமாகின்றது

பல்லவி

                        ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
                        இயேசு கிறிஸ்து வருகின்றார்
                        ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
                        இயேசு கிறிஸ்து வருகின்றார்.

2.         பாவத்தில் புரளுவதும்
            மா சாபத்தில் முடியும் அன்று
            உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
            மிக அவசியமாகின்றது                         - ஓ மானிடரே

3.         தேவனைத் தள்ளுபவர்
            மா வேதனை அடைவார் அன்று
            உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
            மிக அவசியமாகின்றது                         - ஓ மானிடரே

4.         அன்பினால் வரும் அழைப்பு
            நல்லதோர் எச்சரிப்பு
            உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
            மிக அவசியமாகின்றது                         - ஓ மானிடரே

5.         தயவாக ஓடியே வா
            கிருபையின் வாசல் உண்டு
            உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
            மிக அவசியமாகின்றது                         - ஓ மானிடரே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...