கண்களை ஏறெடுப்பேன்


பல்லவி

          கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என்
            கண்களை ஏறெடுப்பேன்.

அனுபல்லவி

            விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
            தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும்

சரணங்கள்

1.         காலைத் தள்ளாட வொட்டார் - உறங்காது காப்பவர்
            காலைத் தள்ளாட வொட்டார்,
            வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்
            காலையும் மாலையும் கண்ணுறங்காரவர்                       - கண்களை

2.         பக்க நிழல் அவரே - எனை ஆதரித்திடும்
            பக்க நிழல் அவரே
            எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது
            அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே          - கண்களை

3.         எல்லாத் தீமைகட்கும் - என்னை விலக்கியே
            எல்லாத் தீமைகட்கும்
            பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
            நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர்                     - கண்களை

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு