போற்றிப் புகழ்ந்திடுவோம், அல்லேலூயா


பல்லவி

 

                   போற்றிப் புகழ்ந்திடுவோம், அல்லேலூயா - துதி

                        சாற்றி மகிழ்ந்திடுவோம், அல்லேலூயா

அனுபல்லவி
            கடந்திட்ட காலமெல்லாம் கண்ணின் மணியைப் போலக்
            காத்தாரே தேவன் நம்மை அல்லேலூயா தினம் - போற்றி

சரணங்கள்

1.         பாவத்தைப் போக்கினாரே அல்லேலூயா - பாவ
            சாபத்தை மாற்றினாரே அல்லேலூயா!
            பாவத்தினாலுண்டான ரோகத்தை மாற்றியவர்
            சோகத்தைத் தீர்த்ததாலே அல்லேலூயா - தினம்         - போற்றி

2.         தாய் உன்னை மறந்தாலும், அல்லேலூயா - தம்
            சேயைப்போல் காத்திடுவார், அல்லேலூயா
            நேயன் நம் இயேசுகிறிஸ்து தாயினு மேலவராய்
            தூயவரம் அளித்தார், அல்லேலூயா - தினம்                 - போற்றி

3.         சோதனைக் காலத்திலே அல்லேலூயா - நாம்
            வேதனைப் பட்டிட்டாலும் அல்லேலூயா!
            நாதன் நம் இயேசுகிறிஸ்து வேதம் நமக்கிருக்க
            சேதம் ஒன்றும் வராது அல்லேலூயா - தினம்                 - போற்றி

4.         பயங்கரப் புயல் உன்மேல், அல்லேலூயா - வெகு
            வேகமாக வீசினாலும் அல்லேலூயா
            கப்பலிலுள்ள கிறிஸ்து கரங்கொண்டு காத்திடுவார்
            தட்டியெழுப்பிடுவாய், அல்லேலூயா - தினம்                 - போற்றி

5.         பூமி முழுவதிலும், அல்லேலூயா - உன்னை
            சாட்சியாய் வைத்திடுவார் அல்லேலூயா
            மறுதலித்தாலும் நீதான் மனங்கசந்தழுதுமே
            அருகில் வந்தாலணைப்பார், அல்லேலூயா - தினம்      - போற்றி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு