மாசில்லாமல் தூயதான


Heligster Jesu Heil'gungs Quelle

Wachetamf

309                                         8, 9, 8, 8, 9, 8, 6, 6, 4, 8, 8

(1-ஆம் பாகம்)

1.                 மாசில்லாமல் தூயதான
            பளிங்கிலேயும் தெளிவான
                        சுத்தாங்க ஊற்றே, இயேசுவே;
                        கேரூபீங்கள் தூய சீரின்
            பிரகாசம் யாவுந் தேவரீரின்
                        முன்பாக மங்கிப்போகுதே;
                        என் பாவத்தின் இருள்
                        அனைத்தும் உமக்குள்
                        தொலையட்டும்;
            ஆ, இயேசுவே, நான் உமக்கே
            ஒப்பாய் சுத்தாங்கமாகவும்.

2.                     மனசார சாவுமட்டும்
                        “பிதாவின் சித்தமே ஆகட்டும்”
                        என்றீர், அமர்ந்த இயேசுவே;
                        என் மனமும் “தெய்வ சித்தம்
                        என் நன்மை,” என்றதற்கு நித்தம்
                        கீழ்ப்பட்டடங்க, உம்மையே
                        பின்பற்ற, தேவரீர்
                        சகாயம்பண்ணுவீர்;
                        எந்நோவிலும்,
            என் இயேசுவே, நான் உமக்கே
            ஒப்பாய் அமர்ந்திருக்கவும்.

3.                     ராப்பகல் உறக்கமற்று
            நல்மேய்ப்பராய்ப் பிரயாசப்பட்டு
                        நன்றாய் விழித்தீர், இயேசுவே;
                        நித்தம் நித்தமும் போதித்தீர்,
                        மங்கா வெளிச்சக் கண்ணனே;
                        விழித்துக் கெஞ்சவே,
                        நான் உம்மிடத்திலே
                        படிக்கட்டும்;
            ஆ, இயேசுவே, நான்உமக்கே
            ஒப்பாய்விழித்திருக்கவும்.

(2-ஆம் பாகம்)

1.                     நீர் நிறைந்த நேசமுள்ளோர்,
            எல்லாரின் மேலும் தயவுள்ளோர்,
                        மகா அன்புள்ள இயேசுவே;
                        உம்மால் தீயோர் பேரிலேயும்
            பகல் உதிக்கும், மாரிபெய்யும்,
                        பெரிய உபகாரியே,
                        ஆ, இந்த உமது
                        குணம் என் மனது
                        அடையட்டும்;
            என் இயேசுவே, நான் உமக்கே
            ஒப்பாய் அன்பாய் இருக்கவும்.

2.                     குற்றமின்றி குரோதமற்று,
            எல்லா இகழ்ச்சியையும் பட்டு
                        மன்னித்தீர், சாந்த இயேசுவே;
                        தெய்வ வீட்டுக்காய் அல்லாமல்
            நீர் வேறெரிச்சலைக் காட்டாமல்
                        இருந்தீர், ஆட்டுக்குட்டியே,
                        நான் அந்தப் பக்தியாய்
                        மிகுந்த சாதுவாய்
                        இருக்கட்டும்;
            ஆ, இயேசுவே, நான் உமக்கே
            ஒப்பாக சாந்தமாகவும்.

3.                                 சுய மேன்மையைத் தேடாமல்,
                        ஓர் மேட்டிமையையும் காட்டாமல்,
                        மாதாழ்மையானீர் இயேசுவே;
                        வேலைக்காரன்போல் திரிந்தீர்,
            எல்லாரிலும் நீரே பணிந்தீர்,
                                    மகா பெரிய கர்த்தரே,
                                    ஆ, என்னை உம்முட
                                    அடிகளில் வர
                                    படிப்பியும்;
            என் இயேசுவே, நான் உமக்கே
            ஒப்பாகத் தாழ்மையாகவும்.

4.                     தேவரீருட பிரிய
            தெய்வீக சாயலை அணிய
                        வாஞ்சிக்கிறேன், என் ஜீவனே;
                        அதுக்குமதாவியாலும்
            பலத்த சத்துவத்தினாலும்
                        சகாயம் செய்யும், இயேசுவே
                                    நான் உமக்கேற்கிற
                                    கனிகளைத் தர
                                    எக்காலமும்;
            நான் உம்மிலே நிலைக்கவே
            சகாயம் கட்டளையிடும்.


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு