மாட்சி போரை போரின் ஓய்வை


Sing my tongue the glorious

Pange Lingua

95                                                  8, 7, 8, 7, 8, 7

1.         மாட்சி போரை போரின் ஓய்வை
                        பாடு எந்தன் உள்ளமே;
            மாட்சி வெற்றி சின்னம் போற்றி
                        பாடு வெற்றி கீதமே;
            மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர்
                        மாண்டு பெற்றார் வெற்றியே.

2.         காலம் நிறைவேற, வந்தார்
                        தந்தை வார்த்தை மைந்தனாய்;
            ஞாலம் வந்தார், வானம் நீத்தே
                        கன்னித் தாயார் மைந்தனாய்;
            வாழ்ந்தார் தெய்வ மாந்தனாக
                        இருள் நீக்கும் ஜோதியாய்.

3.         மூன்று பத்து ஆண்டின் ஈற்றின்
                        விட்டார் வீடு சேவைக்காய்;
            தந்தை சித்தம் நிறைவேற்றி
                        வாழ்ந்தார், தந்தை சித்தமாய்
            சிலுவையில் தம்மை ஈந்தார்
                        தூய ஏக பலியாய்.

4.         வெற்றிச் சின்னச் சிலுவையே,
                        இலை மலர் கனியில்
            ஒப்புயர்வு அற்றாய் நீயே!
                        மேலாம் தரு பாரினில்!
            மீட்பின் சின்னம் ஆனாய், மீட்பர்
                        தொங்கி மாண்டனர் உன்னில்,

5.         பிதா சுதன் ஆவியான
                        தூயராம் திரியேகரே,
            இன்றும் என்றும் சதா காலம்
                        மாட்சி ஸ்தோத்திரம் ஏற்பீரே;
            மாட்சி ஸ்தோத்திரம் நித்திய காலம்
                        உன்னதத்தில் உமக்கே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு