காது குளிர பாடுங்கள் கிருபா சத்தியம்


1.       காது குளிர பாடுங்கள் கிருபா சத்தியம்
            புத்தி தெளியக் காட்டுங்கள் திவ்விய வசனம்
            வெல்க சத்திய வேதம் வாழ்க நித்திய வேதம்

பல்லவி

                        அமிர்தமே அற்புதமே திவ்விய சத்தியம்
                        அமிர்தமே அற்புதமே திவ்விய வசனம்

2.         நல்ல செய்தியைக் கூறுமே கிருபா சத்தியம்
            பாவ நாசத்தைக் காட்டுமே திவ்விய வசனம்
            வான வருஷமாரி ஞான பொக்கிஷவாரி           - அமிர்தமே

3.         வேத நாயகர் பொழியும் கிருபா சத்தியம்
            ஜீவ மங்கள மொழியும் திவ்விய வசனம்
            யேசு மீட்பரைக் காட்டும் இரட்சண்ய வழியைக் காட்டும்           - அமிர்தமே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு