28 June 2018

என்னண்டை வந்திடாயோ


1.       என்னண்டை வந்திடாயோ
            பின்பற்றி வந்திடாயோ
            உன்னை நீ வெறுத்து சிலுவையை எடுத்து
            பின்பற்றி வந்திடாயோ (2)                    - என்

2.         உலகை ஆதாயம் செய்தும்
            ஜீவனோ நஷ்டப்பட்டால்
            மரணம் வரும் வேளை மறுமைக்குள் செல்கையில்
            என்ன லாபம் உனக்கு (2)                      - என்

3.         கல்வாரி காட்சி கண்டும்
            கல் மனம் உருகலையோ
            ஐங்காயங்கள் தனில் அடைக்கலம் அளித்திட
            அழைப்போரை பாராயோ (2)                 - என்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...