தொழுகிறோம் எங்கள் பிதாவே
தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம்
ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த
அலங்காரத்துடனே
தரிசிப்பதினால்
சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும்
சிவப்புமானவர்
உண்மையே
உருவாய்க் கொண்டவர்
என்னையே
மீட்டுக் கொண்டவர்
அன்னையே
இதோ சரணம் சரணம் - தொழு
2. தலை
தங்க மயமானவர்
தலை
மயிர் சுருள் சுருளானவர்
பதினாயிரம்
பேரில் சிறந்தவர்
பதினாயிரமாம்
சரணம் சரணம் - தொழு
3. கண்கள்
புறாக்கண்கள் போல
கன்னங்கள்
பாத்திகள் போல
சின்னங்கள்
சிறந்ததாலே
எண்ணில்லாத
சரணம் சரணம் - தொழு
4. கரங்கள்
பொன் வளையல்கள் போல
நிறங்களும்
தந்தத்தைப் போல
கால்களும்
கல் தூண்கள் போல
காண்பதாலே
சரணம் சரணம் - தொழு
5. சமஸ்த
சபையின் சிரசே
நமஸ்காரம்
எங்கள் அரசே
பிரதானம்
எம் மூலைக்கல்லே
ஏராளமாய்
சரணம் சரணம் - தொழு
6. அடியார்களின்
அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத
விஸ்தாரம்
கூடி
வந்த எம் அலங்காரம்
கோடா
கோடியாம் சரணம் சரணம் - தொழு
7. பார்த்திபனே
கன தோத்திரம்
கீர்த்தனம்
மங்களம் நித்தியம்
வாழ்க
வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா
ஆமென் ஆமென் - தொழு
Comments
Post a Comment