28 June 2018

மந்தையில் சேரா ஆடுகளே


பல்லவி

          மந்தையில் சேரா ஆடுகளே
            எங்கிலும் கோடி கோடி உண்டே
            சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
            தேடுவோம் வாரீர் திருச்சபையே
            மந்தையில் சேரா ஆடுகளே

அனுபல்லவி

                        அழைக்கிறார் இயேசு
                        அவரிடம் பேசு
                        நடத்திடுவார்

1.         காடுகளில் பல நாடுகளில் என்
            ஜனம் சிதறுண்டு சாகுவதா?
            பாடு பட்டேன் அதற்காகவுமே
            தேடுவார் யார் என் ஆடுகளை

2.         சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
            என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு
            அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
            இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்

3.         எனக்காய் பேசிட நாவு வேண்டும்
            என்னைப்போல் அலைந்திடக் கால்கள் வேண்டும்
            என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
            இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...