பலியிலும் மேலாக தேவன் விரும்புவது
பலியிலும் மேலாக தேவன் விரும்புவது
கீழ்ப்படிதலாமே - 2
ஏதேனில் யேகோவா ஏவாளிடம்
கண்டது - 2
இன்றும் நமக்கு இடறலாயிருப்பதாலே - பலியிலும்
1. கன்று கடாவோ
முதற் கனியோ
இவை யாவும் ஒன்றுமே வேண்டாமாம் - 2
நன்று புரிந்து நயமாக நாம்
கீழ்ப்படிந்து - 2
என்றும் நடப்பதே நம் இயேசு விரும்புவது
- பலியிலும்
2. ஏக சுதனான
ஈசாக்கை பலியிட
ஏகினானே
தகப்பன் - 2
பாலகனை பலி பீடத்தின்
மேலே வைத்து - 2
கத்தியை ஓங்கும்
வரை கர்த்தனும் சோதித்தாரே - பலியிலும்
3. அரசனான சவுலும்
ஆண்டவர்
வார்த்தை மீறி பொருளாசையால்
ஓடி - 2
தேவ திரு வார்த்தைக்கு கீழ்ப்படியாமையினால் - 2
தேவ சமூகம் நீங்கி திடனற்று அலைந்தானே - பலியிலும்
- Mrs.
Violet Aaron
https://www.youtube.com/watch?v=ulbXhuM2dmM
- Mrs. Violet Aaron
Comments
Post a Comment