கடைசி நாட்களிலே

கடைசி நாட்களிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          கடைசி நாட்களிலே

            கடாட்சிக்கும் தேவனவர்

                        மாமிசமானவர் யாவரின் மேலும்

                        மாரியைப் பொழிவேன் என்றார் - அருள் - 2

 

1.         பெருமழையின் இரைச்சல்

            பெருந்தொனியாய் முழங்க - 2

            பெருகிடும் கிருபை அறுவடைக்கென்றே

            அருள்மாரி பொழியும் என்றார் - இன்று - 2

 

2.         தரிசனம் கண்டிடுவார்

            கரிசனை உள்ளோரெல்லாம் - 2

            பரிசுத்தவான்கள் கூடி மகிழ்வார்

            மாரிதனைக் கண்டிட - பின் - 2

 

3.         முழங்காலில் நின்றோரெல்லாம்

            முழங்கிடுவார் அன்று - 2

            முழந்தாள்கள் மடங்கும் இயேசுவின் நாமம்

            தளங்களை நிரப்பிவிடும் - பணித் - 2

 

4.         இந்தியாவின் மண்ணிலே

            சிந்திய கண்ணீரெல்லாம் - 2

            பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றே

            தந்தோரை எழுப்பிடும் - தம்மை - 2

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே