பரிசுத்தாவி எங்கள் மீதிலே

பரிசுத்தாவி எங்கள் மீதிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பரிசுத்தாவி எங்கள் மீதிலே

            பொழியுமே இந்த வேளையிலே

                        பிரசன்னத்தால் நிரப்பி எம்மை

                        புது சக்தியை அளித்திடுமே - 2

 

1.         இம்மண்டலம் முழுவதையும்

            உம் ஆவியால் நிரப்பிவிடும் - 2

            அனுப்பியே தாரும் பரிசுத்த அக்கினி - 2

            அந்தகாரத்தை நீக்கிவிடும் - 2 - பரிசுத்தாவி

 

2.         தேவ செய்தி அளிக்கவிருக்கும்

            தேவ பிள்ளையை பெலப்படுத்தும்

            தேவ லோகத்தின் ரகசியங்களை - 2

            தேவா எங்கட்கும் வெளிப்படுத்தும் - 2 - பரிசுத்தாவி

 

3.         பேயின் சக்கி தகர்ந்திடவே

            நோயின் சாபம் அகற்றிடவே - 2

            வல்லமை தாரும் பெலனும் அருளும் - 2

            வரம் தந்தெம்மை அபிஷேகியும் - 2 - பரிசுத்தாவி

 

4.         பரலோகத்தின் அதிபதியே

            பரலோகத்தின் பலகணிகள் - 2

            திறந்தே கொட்டிடும் கிருபை சொரியும் - 2

            திருப்தி படுத்தி அனுப்பும் - 2 - பரிசுத்தாவி

 

 

https://www.youtube.com/watch?v=Wor-xqCf6_A

https://www.youtube.com/watch?v=tFsv0xgVNyY

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்