பரிசுத்த ஜீவியம் செய்வோம் கிறிஸ்தவரே
இராகம்:
சுருட்டி தாளம்:
முறி அடந்தை
பல்லவி
பரிசுத்த ஜீவியம்
செய்வோம்,-கிறிஸ்தவரே;
பரன்மறை
பார்த்தொழுகுவோம்,
அனுபல்லவி
திரியேக
பிதாசுதன் தேவாவி அருளாலே
வருகும் சோதனை எவையுஞ் ஜெயிக்கவே
வளமாய்
சருவாயுத வர்க்கம் தரித்துமே - பரி
சரணங்கள்
1. சத்தியமாம் கச்சையதனை அரையில்-கட்டி
சார்ந்த
நீதிமார்க்க கவசமும்
உத்தம
சமாதான சுவி-சேட ஆயத்தம்
உயர்
பாதரட்சை யதுவும்
பக்தர்கள்
கேடயமாம் பலத்த விசுவாசமதும்
பார்தலைச் சீராவாம் ரக்ஷ்ண்யமும்
பண்பாய் திரு உரை கட்கம்[1] அணிந்துமே - பரி
2. ஆவியின்
கனிகள் நம்மிலே-சருவாங்கமும்
அயலோர்கள் கண்டு தம்மிலே
பூவில்
நிறை சற்குணராக-புனிதராகிப்
பொன்னுலகுக் கேற்றவராக
மேவும் அன்பு சந்தோஷம் மேன்மை சமாதானமும்
வேண்டும்
நீள் பொறுமை தயை சாந்தமும்
விளங்கும்
இச்சையடக்கம் அமைந்துமே - பரி
Comments
Post a Comment