பலிபீடத்தின் காணிக்கையாய்

பலிபீடத்தின் காணிக்கையாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பலிபீடத்தின் காணிக்கையாய்

          பரனேசுவே என்னைத் தந்தேன் - 2

 

                        ஏற்றுக் கொள்ளும் ஏற்றுக் கொள்ளும்

                        ஜீவ பலியாகவே - 2

 

1.         விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்

            உம் பிள்ளையாக என்னை மாற்றினீர் - 2

            பொன்னும் பொருளும் ஈடாகுமோ

            அப்பா உம் நேசத்திற்கு - 2 - பலிபீடத்தின்

 

2.         உகந்த பலியாய் ஏற்றுக் கொள்ளும்

            உடைத்து என்னை உருவாக்கிடும் - 2

            அர்ப்பணித்தேன் முற்றிலுமாய்

            ஆட்கொண்டு நடத்திடும் - 2 - பலிபீடத்தின்

 

3.         நான் செய்த நன்மை ஏதும் இல்லை

            உம் அன்பினாலே தேடி வந்தீர் - 2

            உயிர் வாழ்ந்திடும் நாள் வரையில்

            உம் அன்பை நான் மறவேன் - 2 - பலிபீடத்தின்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்