பலத்தினாலுமல்ல பராக்கிரமுமல்ல ஆவியினால்
பலத்தினாலுமல்ல பராக்கிரமுமல்ல
ஆவியினால் எல்லாம் ஆகும்
1. செங்கடலை கடந்திடுவோம்
எரிகோவை தகர்த்திடுவோம்
கால் மிதிக்கும் தேசம் சுதந்தரிப்போம்
நாம் ஜெயத்தின்
மேல் ஜெயமடைவோம்
2. துக்கத்தில் என் ஆறுதல் அவரே
துன்பத்தில் என் துணை அவரே
பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும்
- எங்க
பாதுகாக்கும் தேவன் அவரே
3. விழித்தெழு விசுவாசியே
ஒற்றுமையாய் செயல்படுவோம்
மகிமையான ஊழியம் தந்திடுவார்
மகிழ்ச்சியோடு ஆராதிப்போம்
4. பயப்படாதே விசுவாசியே
இயேசு ராஜா முன்னே செல்கிறார்
வெண்கல கதவுகளை உடைத்திடுவார்
பொக்கிஷங்கள்
தந்திடுவார்
5. ஆவியாலே பெலனடைவோம்
இலக்கை நோக்கி ஓடிடுவோம்
மணவாட்டி சபையே ஆயத்தப்படு
மணவாளன் வருகின்றார்
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment