07 March 2025

பெலன் இல்லா நேரத்தில் புது பெலன் தந்து

பெலன் இல்லா நேரத்தில் புது பெலன் தந்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பெலன் இல்லா நேரத்தில் புது பெலன் தந்து

            என்னை நீர் தாங்கிடுமே

            திடன் இல்லா நேரத்தில் திட மனம் தந்து

            என்னை நீர் நடத்திடுமே - 2

 

                        பெலன் தாருமே, பெலன் தாருமே

                        உம் பெலத்தால் என்னை நடத்திடுமே - 2

 

1.         எலியாவை போல் வனாந்திரத்தில்

            களைத்துபோய் நிற்கின்றேனே

            மன்னாவை தந்து மறுபடி நடக்க செய்யும் - 2 - பெலன் தாருமே

 

2.         போராட்டங்கள் சூழ்ந்ததாலே

            சோர்ந்துபோய் நிற்கின்றேனே

            சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே - 2 - பெலன் தாருமே

 

3.         மனிதர்களின் நிந்தணையால்

            மனம் நொந்து நிற்கின்றேனே

            மன்னித்து மறக்க உந்தனின் பலன் தாருமே - 2 - பெலன் தாருமே

 

4.         மாம்ச எண்ணம் மேற்கொள்வதால்

            அடிக்கடி தவருகின்றேன்

            பரிசுத்த வாழ்வு வாழ பலன் தாருமே - 2 - பெலன் தாருமே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...