பவனி இதோ செல்கின்றார் பார்

பவனி இதோ செல்கின்றார் பார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

155. இராகம்: தீரசங்கராபரணம்.                                                                                தாளம்: ஆதி.

 

                             பல்லவி

 

                   பவனி இதோ செல்கின்றார் பார்

                   பார்த்திபனார் எருசலேமுக்கு.

 

                             அனுபல்லவி

 

                        பவனி யிதோ செல்கிறதைப்

                        பார்த்திடுவோம் பாலர்களே - பவனி

 

1.         தேவனுடைய செல்வப் பாலன்

            சீவனுள்ள தேவ மைந்தன்

            தேவ தூதர் சேனை விட்டார்

            பூவில் வந்து பாடு பட்டார் - பவனி

 

2.         தாசன் தீர்க்கன் சகரியா

            தானுரைத்த சொற்படியே

            பாசமா யோர் மறிமே லேறி

            நேசமாய் நம் இயேசு ராசா - பவனி

 

3.         முன்னணியும் பின்னணியும்

            முழங்குதே ஓசன்னா வென்று

            மன்னவனார் மேன்மையுடன்

            மவுனமாகப் போகிறாரே - பவனி

 

4.         வழிதனிலே மரக் கிளைகள்

            வஸ்திரங்கள் விரித்திருக்க

            பதியிலுள்ள பரிசேயர்கள்

            அதிபதிகள் அதிர மிக - பவனி

 

5.         சீயோன் நகர் திகிலடைய

            சிறுவர் கூட்டம் துதி முழங்க

            பெரிய துரை போகிறாரே

            அருகிலுள்ளோர் அதிசயிக்க - பவனி

 

6.         குருத்தோலைக் கொடி பிடித்து

            குழந்தைகள் கீதம் பாட

            குருவேசு நாதரதோ

            கும்பலோடு போகிறாரே - பவனி

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்