தொடும் தூரமே வானம்
தொடும் தூரமே வானம்
தொட்டுப் பார்த்ததில்லை
கடல் நீளமே எல்லை
கட்டுக்காவல்
இல்லை
பட்டாம்பூச்சியின் சிறகை வாங்கியே
வானில் வட்டமிடு
சிட்டாய் பறந்திடும் இளமை காலத்தை
கருத்தாய் வாழ்ந்து விடு
துள்ளி
ஆடிய பருவம்
எட்டிப் பார்ப்பதில்லை
பள்ளி வகுப்பறை நாட்கள்
இனிமேல் என்றும் இல்லை
Teen Age பருவமும் College
நாட்களும்
என்றும் கிடைப்பதில்லை
Youth Age நாட்களிலும் தேவனை
தேடிடு
அழகாய் வாழ்ந்து விடு
2. நண்பர் தந்திடும் இனிமை
நட்பு ஆவதில்லை
காதல் வசப்படும்
காலம்
உண்மை நேசமில்லை
கண்ணை கவர்ந்திடும் உலக ஈர்ப்பினை
என்றும் வெறுத்து விடு
உன்னை படைத்த தேவனின் கரங்களில்
உன்னை கொடுத்து விடு
நாளும் கிழமையும் வருடம்
போனால் கிடைப்பதில்லை
காலம் கடந்திட்ட வாய்ப்பும்
மீண்டும் வருவதில்லை
மண்ணில் வாழ்ந்திடும் காலம்
சிறியது
வாய்ப்பை பயன்படுத்து
விண்ணின் தேவனை சார்ந்து வாழ்ந்திடு
உலகை ஜெயித்து
விடு
இனிமேல் துயரில்லை
இதயத்தில் கலக்கமில்லை
வரும் நாள் எங்கள் வசம்
நம்பிக்கை துளிர்க்குமே
Comments
Post a Comment