பாடச் சொல்லித் தந்தவர் இயேசு அல்லவா
பாடச்
சொல்லித் தந்தவர் இயேசு அல்லவா
பாடல் வரிகளும் அவர் அல்லவா
பல்லவி சரணம் அவர் அல்லவா
பாடுவதே என்றும் சுகமல்லவா
1. மண்ணுக்குள்ளே மறைந்திருந்து
மரத்தினைக் காக்கும் வேர் போலவே
நமக்குள்ளே நிறைந்திருந்து
காக்கும் தேவனைத் துதித்திடுவோம்
2. ஒன்றும் ஒன்றும் என்றும் இரண்டல்ல
ஒன்றொடு ஒன்று சேர்ந்து ஒன்றானதே
வாழ்வது இனி நான் அல்ல
இயேசுவே என்னில் வாழ்கிறார்
3. தனிமையிலே ஒன்றும் இனிமை இல்லை
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கிறிஸ்துவின் வீரர்கள் ஒன்று கூடுவோம்
உலகத்தை தலை கீழாய் மாற்றிடுவோம்
Comments
Post a Comment