பரிசுத்த ஆவியே வாருமையா பரலோக

பரிசுத்த ஆவியே வாருமையா பரலோக

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பரிசுத்த ஆவியே வாருமையா

                        பரலோக பலத்தால் நிரப்புமையா - 2

 

1.         அனுதின வாழ்வில் பரிசுத்தனாக

            விளங்கிட எந்தனுக்குதவுமையா - 2

            அனலாவியாலே அடியேனை நிரப்பி

            அக்கினிப் பிளம்பாய் மாற்றுமையா - 2 - பரிசுத்த

 

2.         உன்னத நோக்கம் உயர்ந்ததோர் வாழ்வு

            உயர்வான இலட்சியம் தாருமையா - 2

            உலகினை மறந்து உந்தனை நோக்கி

            அனுதினம் ஓடிட உதவுமையா - 2 - பரிசுத்த

 

3.         சாத்தானின் சோதனை நெருங்கிடும் வேளை

            சத்துவத்தால் என்னை நிரப்புமையா - 2

            சதியான யோசனை தவறான சிந்தனை

            இவைகளுக்கு என்னை விலக்குமையா - 2 - பரிசுத்த

 

4.         பாரத தேசம் உந்தனைக் காண

            பரந்ததோர் தரிசனம் தாருமையா - 2

            பரலோக தேசத்தை பாரத புதல்வர்

            சுதந்திரமாக்கிட உதவுமையா - 2 - பரிசுத்த

 

 

YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்