பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல

பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   பலத்தினாலும் அல்ல பராக்கிரமுமல்ல

                        தேவ ஆவியால் ஆகுமென்றீர் - 2

                        பரிசுத்த ஆவியே வாரும்

                        உம் வல்லமை என்மேல் பொழியும் - 2 - பலத்தினாலும்

 

1.         பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்

            தேவ தாசனுக்கு முன்னால் நீ சமபூமி - 2

            இயேசு நாமம் அவன் சொல்லி வருவான்

            அதற்கு கிருபை கிருபை என்றார்ப்பரி - 2

 

2.         அற்பமான ஆரம்பத்தின் நாளை யார்?

            அசட்டை பண்ணக் கூடுமோ - 2

            பூமியெங்கும் சுற்றிப் பார்க்கும் தேவ கண்கள்

            தேவதாசன் கையில் தூக்குநூலை பார்க்கின்றது - 2 - பலத்தினாலும்

 

3.         கர்த்தரின் ஆவி தான் நம்மோடு

            என்றென்றும் நமக்கு விடுதலை - 2

            ஆவியில் நிறைந்து துதி பாடுவோம் - தினம்

            ஆர்ப்பரித்து ஆனந்தமாய் உயர்த்திடுவோம் - 2 - பலத்தினாலும்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்