பாடிடுவேன் பரமனையே
பாடிடுவேன் பரமனையே
பார்த்திபனாம் நம் இயேசுவே
கூடிடுவோம்
அவர் சமூகமதில்
கும்பிட்டு
வணங்குவோம் மகிமையிலே
மகிமையிலே...
- பாடிடுவேன்
1. என்னை
நோக்கி கூப்பிடுங்கள்
நான்
தருவேன் இளைப்பாறுதல் - 2
உன்மேல்
கண்ணை வைத்து
ஆலோசனை
சொல்வேன்
என்
கிருபையில் நீ பெலப்படு - 2 - பாடிடுவேன்
2. வானமும்
பூமியும் ஒழிந்திடினும் - அவர்
வார்த்தைகளோ
ஒன்றும் ஒழிவதில்லை - 2
அவைகளை
நீ நம்பி நாள்தோறும் துதித்து வந்தால்
கிடைத்திடுமே
உனக்கு நித்திய மீட்சி - 2 - பாடிடுவேன்
3. பகைவர்கள்
ஆயிரம் பேசட்டுமே
பயந்து
போகாதே - 2
பரமன்
இயேசு துணையிருப்பாரே
எதற்கும்
நீயும் கலங்காதே - 2 - பாடிடுவேன்
- Eva. David Raja
Comments
Post a Comment