பாலன் ஜெனனமானார்
பாலன் ஜெனனமானார் பெத்லகேம் என்னும்
ஊரிலே
ஆச்சர்ய தெய்வ ஜெனனம்! அனைவரும் போற்றும்
ஜெனனம்!
1. கன்னி மேரி மடியினில்
கன்னம் குழியச் சிரிக்கிறார்
சின்ன இயேசு தம்பிரான்!
சின்னப்பாலர் யாவருமே சீராய்
நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ
வாரீர்! - பாலன்
2. வானில் பாடல் தொனிக்குது;
வீணை கானம் இசையுது
வையகம் முழங்குது! - 2
சின்னப்பாலர் யாவருமே சீராய்
நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ
வாரீர்! - பாலன்
3. உன்னதத்தில் மகிமையே!
பூமியில் சமாதானமே!
மனுஷர் மேலே பிரியமே! - 2
சின்னப்பாலர் யாவருமே சீராய்
நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ
வாரீர்! - பாலன்
4. இயேசுநாதர் பிறப்பினால்
பிசாசின் சிரசு நசுங்கவே
மோட்ச வாசல் திறந்தது! - 2
சின்னப்பாலர் யாவருமே சீராய்
நேராய் நடந்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ
வாரீர்! - பாலன்
YouTube Link
Comments
Post a Comment