பரிசுத்த ஆவியை எங்கள் மீதிலே
பரிசுத்த
ஆவியை எங்கள் மீதிலே
பரிசுத்த
தேவனே பொழிந்தருளும் - 2
1. இரண்டு
மூன்று பேர் கூடும் இடத்தில்
இருக்கிறேன்
என்று நீர் உரைத்தீர் - 2
இயேசுவின்
இன்ப வாக்கை நம்பி
இருக்கிறேன் இந்த வேளையிலே - 2 - பரிசுத்த
2. அசுத்த உதடுள்ள மனிதன் நான்
அசுத்த ஜனம்
நடுவில் வாசம் செய்பவன் - 2
அக்கினி தழலினால்
எந்தன் நாவை
அக்கிரமம் நீங்க சுத்திகரியும் - 2 -
பரிசுத்த
3. அன்னிய பாஷையில்
நான் பேசி
ஆவியில் மகிழ்ந்திட கிருபை செய்யும் -
2
ஆவியிலே மறுரூபமாகி
ஆனந்தமாய் பறந்திட உதவி செய்யும் - 2 - பரிசுத்த
Comments
Post a Comment