பாடியே பரனை துதி மனமே

பாடியே பரனை துதி மனமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                             பல்லவி

 

                        பாடியே பரனை துதி மனமே, துதி மனமே

                        கொண்டாடி துதி தினமே - (2)

 

                             சரணங்கள்

 

1.         சென்ற நாளெல்லாம் கருத்துடன்

            காத்த நாதனை துதி மனமே

            நாளுக்கு நாளாய் செய்பல

            நன்மைக்காய் நாதனை துதி மனமே

            ஆதரவாய் எம்மை காத்ததினாலே

            தேவனை துதி மனமே - பாடியே

 

2.         நானிலந்தனிலெம் பாவங்கள் போக்கிய

            நாதனை துதி மனமே

            என்றும் எம்மேல் வைத்த மாறிடா அன்பிற்காய்

            நாதனை துதி மனமே

            கானகமதிலே ஜீவ ஊற்றான

            தேவனை துதி மனமே - பாடியே

 

3.         கிருபையால் ஈந்த திருப்பலிக்காக

            நாதனை துதி மனமே

            கோரமாய் வந்த நோய்களை

            தீர்த்ததால் நாதனை துதி மனமே

            தாபரமாய் எம்மை தாங்கியதாலே

            தேவனை துதி மனமே - பாடியே

 

4.         கஷ்டமானாலும் நஷ்டமானாலும்

            நாதனை துதி மனமே

            பஞ்சம் பசியுடன் பங்கம் வந்தாலும்

            நாதனைத் துதி மனமே

            ஜீவனானாலும் மரணமானாலும்

            தேவனைத் துதி மனமே - பாடியே

 

5.         ஏகமாய் எம்மை அன்பினால்

            இணைத்த நாதனைத் துதி மனமே

            அகமதை ஆவியால் ஆலயமாக்கிய

            நாதனைத் துதி மனமே

            தூதரிலும் எமை மேன்மையாய்

            எண்ணிய தேவனைத் துதி மனமே - பாடியே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே