பரிசுத்தமான பரவசமே தரிசிக்க

பரிசுத்தமான பரவசமே தரிசிக்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பரிசுத்தமான பரவசமே

                        தரிசிக்க செய்யும் திருமுகமே

                        பரிசுத்தம் பெற வந்தோம்

                        தரிசிக்க செய்யும் திருமுகமே

 

1.         விரும்பாத பாவம் வேண்டாத சிந்தைகள்

            துரும்பாக நுழைந்து இரும்பாக மாறும்

            அரும்பாடுபட்ட பெரும் பாதை பயணம்

            வீணாகவே என்றும் போய்விடும்

 

2.         பாவியின் நட்பு தீயோரின் உறவு

            எளியோரை என்றுமே அழித்திடும்

            அகந்தை கொண்ட மானிடர் அன்பு

            ஆண்டவர் உறவை முறித்திடும்

 

3.         அகத்தினில் வாழும் பாவத்தால் உந்தன்

            முகச்சாயல் மாறும் வேறுபடும்

            தேவ சாயல் விலகிப் போகும்

            தெய்வத்தின் மகிமை தூரமாகும்

 

4.         நீ செல்லும் பாதை நேர்மை தானா

            நீ சொல்லும் வார்த்தை உண்மை தானோ

            வலப் பக்கத்தில் இயேசு நிற்கிறார்

            அவரிடம் நீ உண்மையைச் சொல்லு

 

5.         கர்த்தருக்கென்றும் பயந்திட்டால்

            கரம் பிடித்தே உன்னை நடத்துவார்

            உன்னை விட்டு விலக மாட்டார்

            உன்னை என்றும் கைவிடமாட்டார்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

P

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்