பள பளன்னு பட்டு கட்டி

பள பளன்னு பட்டு கட்டி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            தை தை தை தை தை தை தை தை தா

 

                        பள பளன்னு பட்டு கட்டி

                        கை நிறைய வளையல் போட்டு

                        ஒய்யாரமாய் வேகம் போகும் செல்ல அக்கா நீங்க

                        எங்க பாட்ட கொஞ்சம் நின்னு கேளுங்கக்கா - தை தை பள பளன்னு

 

1.         அன்னாள் அழுதாள் சாமுவேல் பிறந்தான்

            விசுவாசத்தின் வெற்றி இது

            எஸ்தர் எழுந்தாள் துணிந்தே நின்றாள்

            காக்கப்பட்டனர் தேவ ஜனம்

 

                        ஆலய தலைவன் யவீரு வந்து

                        இயேசுவின் பாதத்தில் வேண்டிக் கொண்டான்

                        யவீருவின் விசுவாசம் இயேசு அறிந்து

                        மகளுக்கு ஜீவன் கொடுத்தாரே

 

            அகிலம் படைத்து ஆட்சி செய்யும் ஆண்டவர் இயேசுவை விசுவாசி

            உந்தன் பயத்தை போக்க வந்த அன்பு தெய்வம் அவர்தானே - பள பளன்னு

 

2.         பயப்பட வேண்டாம் கலங்கிட வேண்டாம்

            நேசர் உந்தன் பக்கமுண்டு

            சோர்ந்து போகும் வேளையிலெல்லாம்

            வேண்டுதல் செய்ய தயங்காதே

 

                        விசுவாசித்து கேட்கும் போது

                        விடுதலை நமக்கு நிச்சயமே

                        கண்ணீர் கவலை பயத்தை போக்க

                        இயேசு சாமி மரித்தாரே - அகிலம் படைத்து

 

3.         திருநெல்வேலி பேராயத்தின்

            பெண்கள் ஐக்கிய சங்கமிது

            உந்தன் வாழ்வின் நன்மைக்காக

            ஜெபிக்கும் பெண்கள் இங்கு உண்டு

 

                        திருநெல்வேலி பேராயத்தின்

                        பெண்கள் ஐக்கிய சங்கமிது

                        உந்தன் வாழ்வின் நன்மைக்காக

                        சேவை செய்யும் சங்கமிது - அகிலம் படைத்து

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே