பாடத்தெரியாது பாடுகின்ற ராகம் புரியாது

பாடத்தெரியாது பாடுகின்ற ராகம் புரியாது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          பாடத்தெரியாது பாடுகின்ற ராகம் புரியாது - (2)

 

                        என்னை பாடச் சொன்ன இயேசு ராஜனை

                        மறந்து ஓடத் தெரியாது - (2) - பாடத் தெரியாது

 

1.         துதிக்க துதிக்க பாட்டு வந்தது

            துன்பம் பறந்திடுச்சி - 2

            இயேசு உதிக்க உதிக்க

            உள்ளத்தில் கிடந்த பாவம் பறந்திருச்சி - 2

            பாவம் பறந்திடுச்சி இயேசுவின்

            பாசம் கிடைச்சிடுச்சி - 2 - என்னை

 

2.         கள்ளம், கபடு, திருட்டு, பொய்வழி

            கண்டு ஒதுங்கி சென்றேன் - 2

            என் உள்ளம் தேடி அலைந்த போதிலும்

            உம்மை அறிந்து கொண்டேன் - 2

            உம்மை அறிந்து கொண்டேன்

            அதில் பல நன்மை புரிந்து கொண்டேன் - 2 - என்னை

 

3.         ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

            என்று சொல்லி துதிக்கச் சொன்னார் - 2

            அதற்கு பாத்திரவானாய் மாற்றி

            என்னை பாடி மகிழச் சொன்னார் - 2

            பாடி மகிழச் சொன்னார்

            அனுதினம் போற்றி புகழச் சொன்னார் - 2 - என்னை

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே