கடைசி பரியந்தமும் காக்க வல்லவர்

கடைசி பரியந்தமும் காக்க வல்லவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   கடைசி பரியந்தமும் காக்க வல்லவர்

                        அவர் நம்மை - காக்க வல்லவரே

 

1.         தூக்கத்திலிருந்து எழும்பிடுவோம்

            மயக்கத்தை முற்றுமாய் வென்றிடுவோம்

            எழும்பி பிராகாசி ஜீவ ஒளிக்குள்ளே

            அவர் பிரசன்னமும் நிழலாகும் வரை - கடைசி

 

2.         விசுவாசக் கப்பலில் சேதம் வராமல்

            நாடின துறைமுகத்தை நோக்கியே

            விரைந்து பாய்ந்து வீரர்களாய்

            ஓடுவோம் நாம் சொந்த கானானுக்குள் - கடைசி

 

3.         பரலோக இராஜ்யம் பேச்சிலே அல்ல

            பெலத்திலே ஜொலிக்கிறது என்றுரைத்தார்

            நிதம் அவர் சத்துவத்தில் பெலப்படுவோம்

            புது துளி மலராய் நாம் வீசிடுவோம் - கடைசி

 

4.         சாத்தானால் சோதனை நெருங்கிடும்பொது

            தளராத தேவனை அண்டிடுவோம்

            ஜெயம் எடுத்தவர் நம் முன்பிலுண்டு

            போராடி ஜெயக்கொடியை உயர்த்திடுவோம்

 

5.         இயேசு மணவாளன் வருகை சீக்கிரம்

            வருகையின் தோற்றங்கள் நடந்தேறுதே

            வேத வசனமெல்லாம் விரைந்தோங்குதே

            சீக்கிரம் நம் தேவன் வந்திடுவார் - கடைசி

 

7.         இரட்சிப்பின் வஸ்திரம் துதியின் உடையும்

            நீதியின் சால்வையும் அளிப்பார் அன்று

            ஜீவ புத்தகம் ஒன்று திறந்திடுவார்

            ஜீவ தேவன் நம்மை கூப்பிடுவார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே