பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
அச்சத்தின்
உச்சத்தை பார்த்தேன்
ஒளியில்லா
இருளில் நான் நடந்தேன்
இயேசுவில்லா
வாழ்வை நான் வெறுத்தேன் - 2
உடைத்தீர் உருவாக்கினீர்
சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்
எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே
மரணத்தின் விழும்பில் நான் இருந்தேன்
பாதாள
குழியில் நான் கிடந்தேன்
பாவத்தின்
பாரத்தைச் சுமந்தேன்
இயேசுவில்லா
வாழ்வை நான் வெறுத்தேன் - 2
உடைத்தீர் உருவாக்கினீர்
சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்
எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே
- Pr. John Kish
Comments
Post a Comment