பாடுவேனே வாழ்விலே என்
பாடுவேனே
வாழ்விலே
என் ஆசை நேசரைக் கண்டேனே
1. சுந்தர மைந்தன் இயேசு கிறிஸ்து
என்ற நாமமே
நிந்தை கோலம் பூண்ட பாலன் - (2)
வேந்தன் இயேசுவே
2. எல்லையில்லா கிருபை
நிறைந்த ஜீவ ஊற்றாமே
அல்லல் தீர்க்கும் அன்பின் வள்ளல் - (2)
எல்லா நாளுமே
3. இவ்வுலகில் உள்ள பொருட்கள்
யாவும் நீங்குமே
எந்தன் ஆசை உந்தன் வீடே - (2)
என்றும் வாழ்வேனே
4. துன்பம் துக்கம் தொல்லை
யாவும் என்னை மூடினும்
அன்பர் என்னை இன்ப வீட்டில் - (2)
கொண்டு போவாரே
5. என்னை ஆண்ட நேசத்திற்கு
என்ன ஈடுண்டோ
என்ன செய்வேன் ஒன்றுமில்லை - (2)
என்னையே தந்தேன்
6. எக்காளம் தொனித்திட
காலமாயிற்றே
மேகமீதில் ஜீவநாதன் - (2)
வேகம் வாராரே
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment