பறக்குது பறக்குது சிலுவை கொடி

பறக்குது பறக்குது சிலுவை கொடி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பறக்குது பறக்குது பறக்குது பறக்குது சிலுவை கொடி

            எங்க தேசமெங்கும், தமிழ் நாடெங்கும்

            என் வீடெங்கும், தேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்தது

 

                        ஜெப சேனை எழும்பிடுங்க - 2

                        துதி சேனை எழும்பிடுங்க - 2

                        எக்காளம் ஊதிடுங்கள் எதிரிகளை துரத்திடுங்கள் - 2

 

                        ஒன்று கூடுங்கள் ஒருமனமாகுங்கள் - 2

                        ஒன்று சேர்ந்து இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் - 2

                        நாம் ஒன்று சேர்ந்து இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் - 2

 

1.         ஓ.... அனலுமின்றி, குளிருமின்றி வாழ்ந்த காலம் போயாச்சு - 2

            எழுந்து நின்று போரடிக்கும் காலம் இனி வந்தாச்சு - 2

            தேவனின் ஆவியால் நிரம்பிடுவோமே - 2

            பெலத்தின் மேலே நாம் பெலன் அடைந்திடுவோமே - 2

            அந்த சத்துரு கோட்டை எல்லாமே தகர்த்திடுவோமே - 2

 

2.         தூங்கி தூங்கி விழுந்துபோன காலம் எல்லாம் போயாச்சு - 2

            விழித்திருந்து ஜெபிக்கின்ற காலம் இனி வந்தாச்சு - 2

            ஜெபத்தின் ஆவியால் நாம் நிரம்பிடுவோமே - 2

            நம் தேசத்திற்காக கதறிடுவோமே - 2

            நம் தேசமெல்லாம் பரலோகமாய் மாற்றிடுவோமே - 2

 

3.         ஓ.... சுயநலமாய் வாழ்ந்த காலமெல்லாம் போயாச்சு - 2

            தேவனுக்காய் எழும்பி நிற்கும் காலம் இனி வந்தாச்சு - 2

            எங்கள் வாழ்க்கையின் நோக்கமெல்லாம் தேவனின் ராஜ்ஜியமே - 2

            அவர் சித்தம் செய்வதே எங்கள் வாழ்க்கையின் நோக்கமே - 2

            அவர் சித்தம் ஒன்றே பூமியிலே செய்து முடிப்போமே - 2

 

 

- Pastor. Lucas Sekar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்