பனி துளி போல் பொழிகிறதே
பனி துளி போல்
பொழிகிறதே தேவனின் அபிஷேகம்
பின் மாரியின் மழை பொழியும் காலம் வந்ததே
- 2
ஒரு மனதோடு சபையாரெல்லாம்
ஒன்று கூடுங்கள் (ஊழியரெல்லாம்)
கர்த்தர் பெரிய காரியம் செய்யும்
வேளை வந்ததே - (2)
1. தலை குனிந்து வாழ்ந்தது போதும் தலையை உயர்த்திடு
சிங்கத்தைப் போல் கெர்ச்சித்து
எதிரியை துரத்திடு - 2
எங்கும் தேவனை தொழுது கொள்ளும் காலம் வந்ததே
- (2)
எழுப்புதல் அடைந்து இயேசுவின் நாமத்தை
என்றும் உயர்த்துவோம்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா - 2
2. கோலியாத்தின் சத்தம் கேட்டு பயந்து போகாதே
உனக்குள் இருக்கும் தேவனை நீ மறந்து போகாதே
- 2
விசுவாசமென்னும்
கேடகத்தாலே ஜெயத்தை பெற்றிடு
- (2)
சத்துருவை உன்
காலின் கீழே மிதித்து எறிந்திடு - (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா - 2
3. உலகத்தை கலக்கும் தேவமனிதராய்
தெரிந்து கொண்டாரே
இருபுறமும் கருக்குள்ள
பட்டயம் நமக்கு தந்தாரே - 2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடந்து
செல்லுவோம் - (2)
சத்துரு மேல் கொடியை ஏற்றி தேசத்தை சுதந்தரிப்போம்
- (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா - 2
- Pastor Lucas Sekar
YouTube Link
Comments
Post a Comment