பவுலின் சிநேகிதனைப் பாரும் இன்று
90. இராகம்: ஏதுகுல காம்போதி. தாளம்: ஆதி
பரி. பர்னபாவின் திருநாள் - சூன் 11ஆம் நாள்
“உலகில் பாவப் பாரத்தால்” - என்ற மெட்டு
பல்லவி
பவுலின் சிநேகிதனைப் பாரும் - இன்று
பருனபா திருநாள்தான்
வாரும்.
அனுபல்லவி
கவலை யொழித்தே
வேதங் கூறும் - செபம்
கருத்தி
லிருத்திப் போதந் தாரும் - ஐயா - பவுலின்
சரணங்கள்
1. ஆறுத
லின்மகனாம் யோசே - முன்னே
அழைத்தா
ரப்போஸ்தலரி னாசை
தேறுதலான
லேவி வம்சம் - இவர்
சீப்புரு
தீவி லொரு அம்சம் - ஐயா - பவுலின்
2. விசுவாசத்
தாலும் ஆவியாலம் - நிறை
வேதிய
ரொழுக் கத்தி னாலும்
மிசனெரி
ஊழிய மென்மேலும் - இவர்
மிலான்
சபைக் கண்கா ணியானாலம் - ஐயா - பவுலின்
3. அந்தி
யோக்கியா முத லான - பல
அன்பின்
சபைகளையும் காண
எந்தைக்
கிறிஸ்து பதம்பூண - இவர்
எருசலை
நகரெங்கும் தோண - ஐயா - பவுலின்
4. சாலேமிப்
பட்டணத்தில் சாக - பொல்லாச்
சண்டாளர்
கல்லா லெறிந் தேக
காலம்
ஐந்தாம் நூற்றாண்டில் தேகம் - கண்டார்
கனத்த
சீனோ ராயன்முன் வேகம் - ஐயா - பவுலின்
5. பாட
சாலைகளிலே தங்கும் - கல்வி
படிக்கும்
மாணவர் நீரே சிங்கம்
பரிசுத்த
ஆவி வரம் வாங்கும் - இந்தப்
பாரினில்
உங்கள் புகழ் ஓங்கும் - ஐயா - பவுலின்
6. ஆஸ்தி
எல்லாவற்றையும் விற்றார் - கிறிஸ்தின்
அப்போஸ்தலர்
பாதம் படைத்தார்
நேர்த்தியான
பங்கைத் தெரிந்தார் - செல்வம்
நிலையற்ற
தென்றெ நிச்சயித்தார் - ஐயா - பவுலின்
- S. உவால்டர் கவிராயர், தென்மலை.
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment