செழிப்பாகுதே துதி உருவாகுதே
செழிப்பாகுதே துதி உருவாகுதே
ஒருவருக்கே மகிமை ஒருவருக்கே
வளமாகுதே வாழ்வு வளமாகுதே
ஒருவருக்கே மகிமை ஒருவருக்கே
உந்தன் நாமத்தினால் நாங்கள்
கேட்கும் போது எல்லாம் நிறைவேறுதே
எல்லாம் நிறைவேறுதே
1. உயர்வான வாக்குகளால்
உடன்படிக்கை செய்வாரே
நிறைவான செல்வங்களால்
தலை நிமிரச் செய்வாரே
அசையாத நம்பிக்கையால்
அசத்தி விட்டாரே
கணக்கிலே அடங்காத காரியங்கள்
கொடுத்து விட்டாரே - ஒருவருக்கே
2. வருடத்தை நன்மையாலே
நன்மையாலே முடிசூட்டுவார்
வருடத்தை நன்மையாலே முடிசூட்டுவாரே -
2
பகற்காலம் முடியவில்லை
செயலாக்க முடியவில்லை
கர்த்தர் கரம் செயலாக்குமே
அதிசயம் நிலையாகுமே
விசுவாசம் பெருகும் போது
ஆவியும் அனலாகுமே
துதி பாடி ஜெபிக்கும் போது
தரிசனம் நிறைவேறுமே - ஒருவருக்கே
- REV. DR. JAWAHAR SAMUEL BROTHER DANIEL JAWAHAR
https://www.youtube.com/watch?v=VP0_Avx1naU
Comments
Post a Comment