பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல

பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பெலத்தினால் அல்ல

            பராக்கிரமம் அல்ல

            ஆவியினால் ஆகும்

            என் தேவனால் எல்லாம் கூடும் - 2

 

                        ஆகையால் துதித்திடு

                        ஊக்கமாய் ஜெபித்திடு

                        வசனம் பிடித்திடு

                        பயத்தை விடுத்திடு - பெலத்தினால்

 

1.         அவனிடம் இருப்பதெல்லாம்

            மனிதனின் புயம் அல்லவா

            நம்மிடத்தில் இருப்பதுவோ

            நம் தேவனின் பெலனல்லவா - ஆகையால்

 

2.         கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்

            அதற்கொரு தடையில்லையே

            மனிதனால் முடியாதது

            நம் தேவனால் முடிந்திடுமே - ஆகையால்

 

3.         இன்று கண்ட எகிப்தியனை

            என்றும் இனி காண்பதில்லை

            கர்த்தர் யுத்தம் செய்திடுவார்

            நீங்கள் ஒன்றும் செய்வதில்லை - ஆகையால்

 

4.         அநேகரை கொண்டாகிலும்

            கொஞ்சம்பேரை கொண்டாகிலும்

            இரட்சிப்பது தடையுமல்ல

            நம் தேவனுக்கு தடையுமில்லை - ஆகையால்

 

 

- RAVI BHARATH

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே