பஜனைசெய் மனமே மேசியா

பஜனைசெய் மனமே மேசியா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

276. இராகம்: உசேனி                    ரூபகதாளம் (454)

 

                             பல்லவி

 

          பஜனைசெய், மனமே; மேசியா

          பஜனைசெய், மனமே; தினம், தினம்.

 

                             அனுபல்லவி

 

            நிஜ மனதுடன் குரு ஏசு நாமம்

            நினை, நல்ல சுகத்தைக் கொடுக்கும்; - பஜனை

 

                             சரணங்கள்

 

1.         பாச வினை யெல்லாம் போக்கும்;-திவ்ய

            பாதமலர்க் கதி சேர்க்கும்;-மகா

            தோஷமென்பதையும் நீக்கும்;-பரி

            சுத்த இருதயமாக்கும்; - பஜனை

 

2.         துன்பம் கவலைகள் நீங்கும்; மனம்

            சோர்பு கொள்ளாமலே தாங்கும்;-தேவ

            அன்பும் சுசீலமும் ஓங்கும்;-இருள்

            அந்தகாரம் வெளி வாங்கும்; - பஜனை

 

3.         ஆசாபாசந் தனை அறுக்கும்;-பொல்லா

            ஆணவ மென்பதை நொறுக்கும்-இந்த

            நீச உலகத்தை வெறுக்கும்-வீண்

            நினைவு கொள்ளாம லுறுக்கும்[1]; - பஜனை

 

4.         மனதை யோர் வழி கூட்டும்; சன்

            மார்க்க நெறியில் ஓட்டும்;-அது

            தினம் மகிமையைக் காட்டும்;-நித்ய

            ஜீவ முடியங்கு சூட்டும்; - பஜனை

 

 

- ஈசாக்கு பாக்கியநாதன்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] அதட்டும்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே