உலகம் பிறந்தது யாராலே
உலகம் பிறந்தது யாராலே
உயிர்கள் வாழ்வது எவராலே
சூரிய சந்திர விண்மீன்கள்
சுழலும் யாவும் எவராலே
1. தாவீது வென்றது எவராலே
சாலொமோன் ஞானம் எவராலே
தானியேல் சிங்க கெபிதனிலே
தப்பித்து வந்ததும் யாராலே - (2) - உலகம்
2. மரித்தவன் உயிர்த்தது எவராலே
முடவரும் நடந்தது எவராலே
யாரால் குருடர் பார்வைப் பெற்றார்
யார்தான் இவவைகளுக்
கதிகாரி - (2) - உலகம்
3. சர்வ வல்லமை பொருந்தினவர்
சர்வ படைத்த இறைவனவர்
கர்த்தர் இயேசுவே என்றறிவோம்
கருத்தாய் அவரை நாம் தொழுவோம் - (2) -
உலகம்
YouTube Link
Comments
Post a Comment