பாரம் நீங்குமே பாரம் நீங்குமே
பாரம் நீங்குமே பாரம் நீங்குமே
பாவப் பாரமெல்லாம் முற்றும் நீங்குமே
பாவ நாசர்
உந்தன் பாவம் போக்குவார்
பாவியாம் உனக்கு விடுதலை ஈவார்
1. எத்தகைய பாவியாகவே இருப்பினும்
எத்தனை தொலைவில் நீ இருப்பினும்
கர்த்தரையே நீ நம்பியே வந்தால்
அத்தனை பாவங்கள் மன்னித்தருள்வார்
2. உந்தன் பாவம் முற்றும் நீக்கி உன்னை விடுவிக்க
உந்தன் அக்ரமம்
யாவும் சுமந்து தீர்த்திட
சொந்தமான தம் இரத்தத்தை ஈந்து
சொந்தமாக்கிடவே
ஜீவனை ஈந்தார்
3. பாவப் பாரம் லோகக்
கவலை கண்ணீர் யாவுமே
தாவி உன்னை நித்தம் தொடர்ந்து கொண்டாலும்
நாடி உன்னையே தேடியே வந்த
நாதன் இயேசுவே உன் பாரம் நீக்குவார்
Comments
Post a Comment