பரிசுத்தமான பரனே என்னை
1. பரிசுத்தமான
பரனே என்னைப்
பாத்திரன்
ஆக்கிடுமே (2)
பரம தரிசனம் தாருமே தேவா
பரிசுத்தமாக்கிடுமே (2)
கர்த்தருக்கு
பரிசுத்தம்
கருத்துடன் நெற்றியிலே
பதித்திட உதவி செய்யும்
பரமனே
சுத்தமாக்கும் - 2
2. அந்தகார வாழ்க்கையில்
பரிசுத்தம் காண
அடிமைக்கு
உதவி செய்யும்
ரகசிய பாவங்கள் வெறுத்திட
எனக்கு
இரங்கிடுமே இந்நேரமே
3. பொது வாழ்வில் என்னை பரிசுத்தமாக்க
காத்திட
உதவி செய்யும்
நாள்தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்த்த
பரிசுத்தம் தந்திடுமே
4. தூசியை உதறி விட்டெழுந்திட எனக்கு
தூயனே
துணை செய்வீர்;
வல்லமை தரித்து வாழ்ந்திட இன்று
உம்
ஆவியை தந்திடுமே
Comments
Post a Comment