பாணிக்ரகணஞ் செய்யும் இருபேருக்கும்

ஞா.கீ:308

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

308. இராகம்: ஆனந்தபைரவி                             ஆதி தாளம் (469)

 

                             பல்லவி

 

                   பாணிக்ரகணஞ் செய்யும்-இருபேருக்கும்,

                   பரனே, கிருபை செய்யும்.

 

                             அனுபல்லவி

 

            மாணப் பெரிய வேதவாசக விதிகொண்டு

            வந்தார், தெய்வாலயம் புரிந்தா ரடித்தொண்டு - பாணி

 

                             சரணங்கள்

 

1.         அன்றாத மேவை சீராய்-ஏகாந்தமாக

            அன்போ டிசைந்த நேராய்,

            துன்றி யபிராஞ் சாராய்-மனோகர

            சுத்த இதயத்தோராய்

            மன்றல் செய்வா ருவந்து-வைக இவர் பால் வந்து

            வாக்குத் தத்தம் நினைந்து வரப்பிரசாதந் தந் - பாணி

 

2.         கானா விவாகம் நாடி-சிந்தை மகிழ்ந்து

            கரிசனையாய்க் கொண்டாடிப்

            போனீ ராறு கற்சாடி-நிறைந்த ரசம்

            புரிந்தீ ரங்குறவாடி

            கோனே! யின்றுமைத் தெடி-கோயிற் புகுந்தார் தேடி

            குழைந்துந்தன் துதிபாடி-கூடி மாங்கில்யஞ்சூடி - பாணி

 

3.         திருச்சபை மனையாட்டி-அன்பே, புறாவே

            செல்வமே யென்று பாராட்டி,

            வரச்சொல்லி, நேசங்காட்டி-உன்னதகீத

            வாக்கு வர்ணனை கூட்டி

            உரைக்குமது மெய்ஞ்ஞான-மணவாளா, உவமானம்,

            உவமேயமிது நிதானம்;-வேணுநின் சமாதானம் - பாணி

 

- சு.ச. ஏரேமியா, தெல்லிவினை, இலங்கை.

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே