28 March 2025

பாடினால் பாடுவேன் இயேசு பாலனை

பாடினால் பாடுவேன் இயேசு பாலனை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பாடினால்‌ பாடுவேன்‌ இயேசு பாலனை

            உன்னைப்‌ பாடினால்‌ துன்பம் நீங்கிடும்‌

                        தேடினால்‌ தேடுவேன்‌ இயேசு தேவனை

                        உன்னருள்‌ நான்‌ தேடுவேன்‌... தேடுவேன்‌ - 2 - பாடினால்

 

1.         பன்னிரு வயதினில்‌ பாலகன்‌ நீரே

            என்னரும்‌ போதனை இயம்பி நின்றீரே - 2

            கோடையில் கிடைத்த குளிர்‌ இளநீரே - (2)

            கடையர்‌ களித்திட கதி தருவீரே - பாடினால்

 

2.         பாவை உம்மை தொட்டதினாலே

            பறந்து போனதே அவள்‌ தன்‌ நோயும்‌ - 2

            பாவி எந்தன்‌ பாவ வினைகள் - (2)

            பறந்து போகுமே உன்னை நினைத்தால்‌ - பாடினால்

 

 

- Pulavar S. Xavier Sargunam

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...