உம்மைப் போல் யாருண்டு என்னை நேசிக்க

உம்மைப் போல் யாருண்டு என்னை நேசிக்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

401. இராகம்: சங்கராபரணம்                      ஏக தாளம்

 

                             பல்லவி

 

          உம்மைப் போல யாருண்டு, என்னை நேசிக்க

 

                             சரணங்கள்

 

1.         அம்மையோ அப்பனோ அண்ணனோ, தம்பியோ,

            எம்முறை யானோரோ ஏங்கிடும் மக்களோ.

 

2.         தங்கமே தாதாவே[1] துங்கவா தூயோனே,

            மங்கா மணாளனே மாநிலம் மீட்டோனே.

 

3.         பங்கக்குருசினில் பாவி என் மீட்புக்காய்,

            தொங்கி ஜீவன் விட்ட தேவ குமாரனே.

 

 

4.         அல்லும் பகலுமாய் ஆண்டு முழுவதும்

            தொல்லை துக்கத்திலும் தூக்கம் விழிப்பிலும்

 

5.         லோக சினேகமோ ஏகமாய் சஞ்சலம்

            சோகம் கொண்டேனும் மேல் ஏகனே ஏசையா

 

6.         வெற்றியாய் யுத்தத்தில் வெகுவாய் முன் செல்ல  

            வெற்றி வேந்தராக விளங்குவீர் என்னிலே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 



[1] தந்தையே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

கிறிஸ்தவ கீர்த்தனைகள்