பண்டைய நமது நாடு

பண்டைய நமது நாடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

1.       பண்டைய நமது நாடு

            சுவிசேஷம் கேட்காத காலம்

            இருளின் அந்தகாரம்

            என் தாய்த் தமிழ்நாட்டின் கோலம்

            அன்று மார்பு மறைக்கவும் இயலா

            பள்ளிக்கூடத்தில் செல்லவும் இயலா

            கணவன் மரித்துப் போனால்

            தீயில் குதித்து சாகணும் தானே

 

2.         ஜாதி பிசாசு புகுந்து

            என் நாட்டை அழித்தொரு காலம்

            எளியவர் கண்ணீரைக் கண்டு

            என் இதயம் வெடித்த நேரம்

            எஜமானுக்காகவே வாழ்ந்து

            பின் எஜமானுக்காகவே செத்து

            என் பெஞ்சாதி பிள்ளைங்க கூட

            இப்ப எஜமானின் சொத்துக்கள் ஆச்சே

 

3.         கடவுளுக்கில்லையே ஜாதி

            என்று சத்தியம் சொல்லித் திரிந்த

            நல்ல மிஷனரிமார் இங்கு வந்து

            இயேசுவின் அன்பைப் பகிர்ந்து

            ஆலயத்தோடொரு பள்ளி

            கட்டி மக்களைக் கூவியழைத்து

            கல்வியறிவைக் கொடுத்து

            அந்தகாரம் கொஞ்சம் நீக்கி

 

4.         அன்று நான் பைபிளைக் கண்டேன்

            என்னை நேசிக்கும் தேவனைக் கேட்டேன்

            சிலுவை சுமந்த நாதன்

            என் பாவம் போக்கத் தானே

            நான் செய்த பாவக் கடன்கள்

            எல்லாம் கோரக் குருசில் சுமந்து

            சாத்தானின் கோட்டை தகர்த்து

            என்னை தேவனின் பிள்ளையாய்த் தீர்த்தார்

 

5.         தெய்வங்கள் வேறே உண்டானால்

            பின் இயேசு மரித்தது வீணே

            உன்னையும் என்னையும் மீட்க

            வேறு தெய்வங்கள் என்றொன்றும் இலையே

            தேவனின் பிள்ளைகள் நாமே

            நாம் புது சிருஷ்டிகள் தானே

            பழைய ஜாதியின்படியே இன்று

            நம்மில் பேதகம் பார்ப்பதும் சரியா

 

6.         மரித்தவர் உயிர்த்தெழுந்தாரே

            என்னைக் கூட்டிச் செல்ல வருவாரே

            இயேசுவை தெய்வமாய்க் கொண்ட

            மக்களை மட்டுமே சேர்ப்பார்

            பேசாமல் எப்படி இருப்பேன்

            என்னை நேசித்தவரைப் பாடுவேன்

            சொர்க்கத்துக்கான மார்க்கம்

            இயேசுவில் விசுவாசம்

            இயேசுவில் விசுவாசம்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே