வாவா ஜெகதீசா - வரந்தரவே


பல்லவி

                   வாவா ஜெகதீசா - வரந்தரவே
                        வாவா ஜெகதீசா - இதுசமயம்
                        வாவா ஜெகதீசா - உன் மகிமையை
                        யார் யார் யார் அறிவார்?

சரணங்கள்

1.         காவிற் கனிபுசித்த ஏவையின் மக்களுக்காய்
            பூவில் கனி பாலுண்டவா, புகல் சொல்லாதே                  - வாவா

2.         இரண்டு மூன்று பேர் கூடி தொண்டு புரியும் வேளை
            அண்டையில் வருவேன் என்றீரே, அட்டி சொல்லாதே   - வாவா

3.         பன்னிரு சீஷர்களும் பரிசுத்த ஆவிபெற்று
            பற்பல பாஷைகள் பேசினார், பிரசங்கம் செய்ய               - வாவா

4.         கேளுங்கள் அப்பொழுது கிருபையாகக் கொடுப்பேன்
            தட்டுங்கள் திறப்பேன் என்றீரே, தாமதமென்ன               - வாவா

5.         மோசே முதலாயுள்ள தீர்க்கர் முனிவருக்கும்
            ஆசீர்வாதங் கொடுத்தவா அருள் புரிய                         - வாவா

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு