30 May 2019
பரலோக தந்தாய் நின்னாமம்
உலகும் வானும் செய்தாளும்
அருட் பெரும் சோதி நீ அடியேனை
28. (13 Y) உன்
திருவரம் தருவாயே
சுத்தசாவேரி ஆதிதாளம்
பல்லவி
அருட் பெரும்
சோதி, நீ அடியேனை மீட்டே-உன்
திருவரம் தருவாயே.
அனுபல்லவி
மருள்
கொண்டு மாய்கிறேன், மானிலந் தன்னிலே
அருள் தந்து காப்பாயே. - அருட்
சரணங்கள்
1. அல்லல் வினை யகற்றும் அரிய குமாரன் நீ,
தொல்லுலகை ரட்சித்த கொல்கதா வீரன் நீ,
செல்வம் அளிக்கும் நல்ல தெய்வ குபேரன்
நீ,
புல்லன் எனக்கு வாய்த்த சொல்லரிய பொக்கிஷம்
நீ. - அருட்
2. வன் நெஞ்சேனை இழுத்த தீன தயாளன் நீ,
புன் செயலை அளிக்கும் இன்சொல் இறைவன் நீ,
மன் பதையை ரட்சித்த மாண்புடை யேசு நீ,
என் மனதுக்குகந்த அன்பின் சொரூபம் நீ.
- அருட்
3. இத்தரையோர்க்கு வேண்டும் சுத்த சுவிசேஷம்
நீ,
புத்துயிரை அளிக்கும் நித்திய சீவன் நீ,
முத்தி நெறியைக் காட்டும் மூலப் பரப்பொருள்
நீ,
பித்தன் எனக்கு வாய்த்த சித்த சிகாமணி
நீ. - அருட்
- ஈ. த. யே.
சொல்லிவந்துன் பாதம் புல்லினேன்
தூயர் தூயர் தூயரெனத் தூதர் தினம்
அல்லேலூயா என்றுமே அவருடைய
ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்
நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file Youtube Link ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா ...
-
உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன் மேலும் அதிக பாடல்களுக்கு உன்னதரே உம் மறைவில் தங்கி...
-
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண தாய் மறந்தாலும் நீர...
-
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுகெல்லாம் மேலும் அதிக பாடல்களுக்கு என் வாழ்விலே நீர் ப...
